ஊடகங்கள் காகமாய் கரைந்தன…
ஆளும் வர்க்கம் ஆர்வமாய் முன்வந்து ஆரவாரம் காட்டியது…
நீதிமன்றமும் நித்தம்,நித்தம் கண்டனங்கள் தெரிவித்தன…
காவல்துறை கடமையை செய்ய மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கபட்டு கொலையாளியும் கைது செய்யபட்டான்…
அரசின் நான்கு தூண்களும் மிகச்சரியாய் தாங்கிபிடித்தன நமது தேசத்தின் மானம் காற்றில் பறக்காமல் இருக்காதவாறு..
நிச்சயமாய் பாராட்டபடவேண்டிய ஒன்றுதான்,ஆனால் இது போன்ற எண்ணற்ற சுவாதிக்களின் மரணத்தை விட கொடிய பலாத்காரங்கள் தினம்,தினம் அறங்கேறிகொண்டேதானிருக்கிறது….
பிற்படுத்தபட்ட,மிகவும் பிற்படுத்தபட்ட,தாழ்த்தபட்ட இனத்தவர் இதை போன்ற நிகழ்வுகளை சந்திக்கும் போது இந்த நான்கு தூண்களும்.. வெறும் தூண்களாய் மட்டுமே நிற்பதின் மர்மம் என்ன?
கடலூர் மாவட்டத்தை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீக்கு இத்தனை வேகம் காட்டாதற்கு காரணம் என்ன?
கொலையை விட கொடிய,மூன்று காம கயவர்கள் சேர்ந்து,பாலியல் வன்புணர்ச்சி செய்து,அவர்களின் வீட்டையும் எரித்து நாசமாக்கிய கயவர்களை இந்த நான்கு தூண்களும் கண்டுகொள்ளாமல் விட்ட மர்மம் என்ன?
வீடு இழந்து,கற்பிழந்து,மானமிழந்து ஒரு குடும்பத்தின் வாழ்வே கேள்விகுறியான சூழலில் அந்த குடும்பத்தை இந்த நிலைக்கு உட்படித்திய கயவர்கள் சுதந்திரமாய் இன்று அதே ஊரில் வலம் வருவது தேசத்தின் அவமானம் இல்லையா?
சுவாதி மட்டுமல்ல தமிழகத்தில் இனி ஒரு சம்பவம் இதை போல நடக்காமல் இருக்க வேண்டுமெனில் இந்த மூன்று காமகொடூரர்களுக்கும் மரண தண்டனை கொடுக்கபட வேண்டும் மேலும் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரங்களுக்கு கொடூரமான மரண தண்டனை தர இந்திய அரசியல் சட்டத்தில் சட்ட திருத்தம் செய்யபடவேண்டும்.. மனைவியை தவிர மற்ற பெண்களை நமது தாயாக,தங்கையாக பார்க்க வேண்டுமெனில் முறையாக விசாரித்து,பரிசோதித்து ‘குற்றம் நிரூபிக்கபட்டால் தண்டனையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கடுமையான தண்டனையை நிறைவேற்ற சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்”
என்பதே நமது கருப்பு எழுத்து கழகத்தின் வேண்டுகோள்… இந்த சட்டதிருத்ததிற்காக இந்திய அரசை வலியுறுத்த முடிவு எடுக்கபட்டுள்ளது..