நக்கீரனின் தரத்தைப் பாருங்கள்.

அன்பார்ந்த சவுக்கு வாசகர்களே….     நக்கீரன் இதழின் தரத்தைப் பற்றியும், எவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் செல்லக் கூடும் என்பதைப் பற்றியும், சவுக்கு பல முறை எழுதியிருக்கிறது.

 

நேற்று, சவுக்கு தளத்தில், நக்கீரன் அலுவலகத்தில் உள்ளே நடந்த மோதல்கள் குறித்து, செய்தி வெளியிடப் பட்டிருந்தது.  அந்தச் செய்தி இதுதான்.

“நக்கீரன் வார இரு முறை வார இதழின் நிருபர்கள் கூட்டம், 29.05.2011 அன்று காலை 10மணிக்கு நக்கீரன் அலுவலகத்தில் நடந்தது..

தமிழகம் முழுவதும் நிருபர்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து, அதை செய்தியாக்க வேண்டும் என்று கூறிப்பிடப்பட்டிருந்தது.

இணை ஆசிரியர் காமராஜ் தலைமை நிருபர்கள் கூட்டம் தொடங்கியது, ஆசிரியர் கோபால் வந்தவுடன், எங்க தம்பி சிவசுப்ரமணியனை காணவில்லை உடனே காமராஜ், அவரை கூப்பிடவில்லை, ஏன்.. சிவா நம்ம வளர்ச்சிக்கு உழைத்தவன், உங்கள் விருப்பு வெறுப்பை நிருபர்களிடம் காட்டாதீர்கள், நக்கீரன் வளர்ச்சி என்பதே வீரப்பனை வைத்துதான், அதில் தம்பி சிவாதான் முக்கிய பங்கு ஆற்றினார், என்று கூறிவிட்டு எழுந்து அவர் அறைக்கு போய்விட்டார்..

நிருபர்களிடம் கருத்து கேட்ட போது, ஈரோடு நிருபர் ஜிவா, நாம் திமுக ஆதரவு பத்திரிகை என்பதை நிருபித்து வருகிறோம், நடு நிலை பத்திரிகையாக இருந்தால் மட்டுமே விற்பனை உயரும் என்றவுடன், காமராஜ் உனக்கு என்ன தெரியும் செய்தி அனுப்பவது இல்லை, வீரப்பன் பெயரை சொல்லி உங்க பொழப்பு ஓடுது என்ற கண்டபடி பேச, ஜிவா கூட்டத்திலிருந்து வெளியேறி கோபால் புகார் கூறினார், திரும்பவும் கூட்டத்திற்கு வந்த கோபால், ஜிவாவிடம் எதாவது கேட்க வேண்டுமானால் தனியாக கேளுங்கள், அவர்கள் வீரப்பன் தொடபான வழக்கில் ஆஜராவதில் காலம் போய்விடுகிறது, சீனியர் நிருபர்களை எல்லாம், அனைவர் முன்னாடி பேசுவது சரியல்ல என்று கூறிவிட்டு வெளியேறினார்..

காமராஜ் செல்போன் பேச கூட்ட அறையிலிருந்து வெளியே வர, நிருபர் பிரகாஷ், ஜிவாவை பார்த்து ஆசிரியரிடம் சொன்னால் பருப்பு வேகாது, காமராஜ் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போய் பொழப்பை நடத்து என்று கிண்டலடிக்க, ஜிவா, பிரகாஷ்யை அடிக்க பாய, கூட்டத்தில் அடிதடி நடந்தது. பிறகு காமராஜ் சமாதானம் செய்தார்..

கடைசியில் காமராஜ், ஆசிரியரை ஜெயலுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா, மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்துள்ளார்(இதை எல்லாம் ஒருமையில் பேசினார் அவ, இவ என்று) ஒவ்வொரு நிருபரும் அதிமுகவுக்கு எதிராக செய்தி சேகரித்து அனுப்ப வேண்டும்..

அதிமுக எதிராக ஆதாரத்துடன், புகைப்படத்துடன் செய்தி கொடுக்கும் நிருபர்கள் மாதம் மாதம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்பட்டும் என்று காமராஜ் பேசிய பிறகு கூட்டம் முடிந்தது..”

 

tannivandiஇதைப் படித்த நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் தனது 96770 91357 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார்.  இது இதழியல் நெறிகளை மீறிய செயல் என்று, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் கருத்து தெரிவித்தார். அவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. நம்மை கடிந்து கொள்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் ? எடுத்த எடுப்பில் அவதூறான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதா ?

 

நக்கீரன் எடிட்டோரியல் அறையில் நடந்தவைகளை எழுதுவதற்கு சவுக்குக்கு உரிமை இல்லை என்றால், நித்யானந்தாவின் படுக்கையறையில் நடந்தவைகளை படம் பிடித்துக் காட்டுவதற்கு மட்டும் நக்கீரன் இதழுக்கு உரிமை உண்டா ?

 

சவுக்குக்கு தகவல் சொல்லுபவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து சொல்வார்கள்.   அவற்றின் நம்பகத்தன்மையை பரிசோதித்த பிறகே, அவை பதிவேற்றப் பட்டு வருகின்றன.   சவுக்குக்கு யார் தகவல் தருகிறார்கள் என்பது குறித்த எவ்வித புரிதலுமின்றி, சில பத்திரிக்கையாளர்களைப் பற்றியும், சில காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், மிகவும் கொச்சையாக பதிவேற்ற முடியாத வார்த்தைகளால் இன்று காலை 10 மணிக்கு, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை அர்ச்சனை செய்தார்.

 

பிரகாஷ் இது போல அவதூறான வார்த்தைகளால் சவுக்கை ஏசியதால், அது சவுக்குக்கு அவமானம் அல்ல…. இது போன்ற தரந்தாழ்ந்த நபர்களை தலைமை நிருபராக வைத்திருப்பதன் மூலம், நக்கீரன் இதழின் தரம் தெரிகிறது.

 

இந்த உரையாடலின் ஒலிப்பதிவை சவுக்கு அப்படியே சமர்ப்பிக்கிறது. மிக மிக அவதூறான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது இந்த உரையாடல். வாசகர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

{mp3}Record003{/mp3}

Thanks :Savukku

0 நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா..

இன்று நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ஜானி ஜான் கான் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது.  நக்கீரன் அலுவலகம் அதிமுக தொண்டர்களால் காலை 10 மணி முதல் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறது.  இந்தத் தாக்குதலுக்கான காரணம், நக்கீரன் வெளியிட்ட செய்தி.

அப்படி என்ன செய்தி வெளியிட்டது நக்கீரன்.. … ?  அது ஒரு கவர் ஸ்டோரி.   “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா. இதுதான் அந்தச் செய்தியின் தலைப்பு.  உள்ளே உள்ள கட்டுரையில் அந்தச் செய்தி இதுதான் “ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது.   அதை விரும்பாத ஜெ., “அதைப்பற்றிப் பேசாதீங்க.  நான் தவறான விதையை விதைச்சிnakkheeran_gopal4ட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்.  என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம்.  இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது.  அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது.  எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார்.  அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார்.   கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க.  அப்ப பொன்னையன் இருந்தாரு.  அவரு ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு.  இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார்.  அப்ப எம்.ஜி.ஆர், ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா ?  பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க.  அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும்.  அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க.  ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு.  நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை.  மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார்.  இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.

nak1

nak2

nak3

இதுதான் அந்தச் செய்தி.  இந்தச் செய்தி பொய் என்பது மட்டுமல்ல.  மிக மிக விஷமத்தனமாகது.  அவதூறானது. அயோக்கியத் தனமானது என்பதில் நியாய உணர்வுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.   ஆனால், நக்கீரன் இன்று நேற்றல்ல… பல காலமாக இப்படித்தான் பத்திரிக்கை நடத்தி வருகிறது.  சவுக்கில் கூட, நக்கீரனைப் பற்றி அச்சு வடிவில் ஆதித்யா,  என்றெல்லாம் நக்கீரனைப் பற்றி பலமுறை எழுதப் பட்டுள்ளது.  நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படிப் பேசினார் என்பதை, சவுக்கு வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.  இதற்குப் பிறகும், இப்படிப் பட்ட ஒரு நபரை, நக்கீரன் இதழின் தலைமை நிருபராகவே இன்னும் பணியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்தப் பத்திரிக்கை எப்படிப் பட்ட பத்திரிக்கை என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நக்கீரன் இதழின் தரத்தைப் பாருங்கள் என்ற கட்டுரையை படியுங்கள்

வியாபாரத்திற்காக நக்கீரன் எது வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு நித்யானந்தா விவகாரமே ஒரு சாட்சி.   இது மட்டுமல்லாமல் கடந்த ஆறு மாத காலமாக நக்கீரன் பத்திரிக்கையைப் படித்து வருபவர்களுக்கு, அதில் வெளிவரும் பெரும்பாலான செய்திகள், நக்கீரன் அலுவலகத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்து எழுதும் கற்பனைச் செய்திகள் என்பது நன்கு தெரியும்.

ஆனால், இந்த இதழில் ஜெயலலிதா பற்றி வந்துள்ள கற்பனைச் செய்தியானது, அயோக்கியத்தனத்தின் உச்சம்.   இதை மன்னிக்கவே முடியாது.   இப்படி ஒரு செய்தி வெளியிட்டால் தாக்குதல் நடக்கும் என்பது நக்கீரனுக்குத் தெரியாதா ?   நிச்சயம் தெரியும்.  பிறகு ஏன் வெளியிட்டார்கள் ?

நித்யானந்தாவை மிரட்டி பணம் பறித்ததாக கொடுக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டு, பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த விவகாரத்தில் காமராஜ் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்பதே காவல்துறை வட்டாரத் தகவல்.  இப்படிப் பட்ட சூழலில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, அதிமுகவினர் அலுவலகத்தைத் தாக்கினால், நாளை நித்யானந்தா விவகாரத்தில் காமராஜ் கைது செய்யப் பட்டால் கூட, ஜெயலலிதாவுக்கு எதிராக இப்படிப் பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாலேயே காமராஜ் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் வகையில் கைது செய்யப் பட்டுள்ளார் என்று தகிடுதத்தம் செய்யலாம் என்ற திட்டமாகவே இருக்கக் கூடும்.  வழக்கமாக 10 மணிக்கு அலுவலகத்துக்கு வரும், நக்கீரன் கோபாலும், காமராஜும் இன்று காலை 7 மணிக்கே அலுவலகத்துக்கு வந்து அமர்ந்திருப்பதும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.   அடுத்த இதழ் நக்கீரனைப் பாருங்களேன்.   “லைவ் கவரேஜ்….  ஜெ ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆபத்து.  நக்கீரன் அலுவலகம் மீது அதிமுக ரவுடிகள் தாக்குதல்” என்று பக்கங்களை நிரப்புவார்கள்.   திமுக ஆட்சியின் போது, பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்து, பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் குரல்வளையை நெறித்த கருணாநிதி, “அய்யகோ… அம்மையார் ஆட்சியில் அநியாயத்தைப் பாரீர்” என்று ஓலமிடுவார்.

பத்திரிக்கை சுதந்திரம் பரிபோகிறது என்று கூப்பாடு போடும் நக்கீரன், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்ற கட்டுரையைப் படியுங்கள்.  காமராஜின் பவுசு தெரியும்.

இதெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகவே நக்கீரன் வேண்டுமென்றே இப்படிப் பட்ட செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும்.  அந்த வலையில் அதிமுகவினர் வசமாக சிக்கிக் கொண்டனர்.   இன்று காலை பத்து மணி முதலாகவே சாரி சாரியாக நக்கீரன் அலுவலகத்துக்கு வந்த அதிமுக தொண்டர்கள், கற்களை வீசி நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர்.  பெரிய இரும்பு கேட் இருந்ததால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.   முதலில் ஒரு அணி சென்று கலாட்டா செய்து முடித்ததும், அடுத்த கட்டமாக ஜின்னா என்ற கவுன்சிலர், ஜானி ஜான் கான் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்.    அவரோடு வந்த தொண்டர் அடிப்பொடிகள், “கடையை மூட்றா” என்று அனைவரையும் மிரட்டி கடையை அடைக்க வைத்தனர்.   ஜின்னா மற்றும் அவரது டீம்,  நக்கீரன் அலுவலகத்தை அடையும் முன்பாகவே, உதவி ஆணையர் செந்தில் குமரன், அவரை வழியிலேயே மடக்கி, சமயோசிதமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

அடுத்தடுத்து வந்த அதிமுக அணியினர், நக்கீரன் அலுவலகம் முன்பாக, நக்கீரன் இதழ்களை கொளுத்துவதும், நக்கீரன் ஆசிரியர் கோபாலை, காது கூசும் அளவுக்கு, கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும், பெரிய பெரிய கற்களை வீசி அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்த முயற்சிப்பதும் என தொடர்ந்து கொண்டே இருந்தது.   நான்காவதாக வந்த மகளிர் அணியினர், துடைப்பத்தை நக்கீரன் அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.   அதற்கு அடுத்து வந்த மகளிர் அணியினர் ஒரு வாளியில் சாணியைக் கரைத்து ஊற்றினர்.  அந்த சாணிக் கரைசல், நக்கீரன் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே விழுந்தது.  காலை 10  மணி முதல் அந்த இடத்தில் பம்பரம் போல சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த செந்தில்குமரன் மீதும் விழுந்தது.

அடுத்து வந்த அதிமுக அணி சிறிது கடுமையாக வன்முறையில் இறங்கியது.   அங்கிருந்த காவலர்களை தாக்கியது.   அப்போது பாய்ந்து சென்ற செந்தில்குமரன், கேட்டின் மீது ஏற முயன்ற சில அதிமுக தொண்டர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினார். பிறகு அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.  சவுக்கு அந்தத் தெருவில் இருந்த மதியம் 3 மணி வரை, போராட்டம் நிற்கவில்லை.

அதிமுகவின் இந்தப் போராட்டங்கள் அரசின் துணையோடும், காவல்துறையின் ஒத்துழைப்போடுமே நடந்துள்ளது.   அதிமுக தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைப் பற்றி அவதூறாக எழுதிய நக்கீரன் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த எல்லா உரிமையும் இருக்கிறது.   இதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும், நீதிமன்றம் செல்லவும், வழக்கு தொடுக்கவும், எல்லா உரிமையும் உண்டு.  அனால், காலை முதல், ஒரு தெருவில் உள்ள எல்லா கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டி, கற்களை வீசி ஒரு அலுவலகத்தைத் தொடர்ந்து தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதிமுக தொண்டர்கள் இது போல போராட்டம் நடத்துவார்கள், அவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.   அரசின் துணையோடு நடக்கும் இது போன்ற வன்முறைப் போராட்டங்களை இன்று அங்கீகரித்தால், நாளை ஆதாரத்தோடு அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் தாக்கப் படும்.  ஒரு ஜனநாயகத்தில் ஊடகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பபது மிக மிக முக்கியம்.

திமுகவின் அராஜகங்களால், மனம் வெதும்பிய மக்கள் அளித்த வாக்கில் இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, இது போன்ற வன்முறைகளுக்கு ஆதரவு தருவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.  இந்த வன்முறைகள் அத்தனைக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும், உள்துறை அமைச்சர் என்ற முறையிலும், ஜெயலலிதாவே பொறுப்பு.   நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதாவுக்கு இருக்கும் கோபத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால், அந்தக் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு இது வழியல்ல.

அதிமுக தொண்டர்களின் வசவுச் சொற்களையும், சாணிக் கரைசலையும் பொறுத்துக் கொண்டு, தங்கள் பணியைச் செவ்வனே செய்த காவல்துறையினரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்…  அரசுப் பணி என்று ஒரு வேலைக்கு வந்ததற்காக இந்த நிலைமையா ?   இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா ?  காவல்துறையினர் இப்படி அமைதியாக இருந்திருப்பார்களா ?

நக்கீரன் பத்திரிக்கை ஒரு கட்சித் தலைவியைப் பற்றி தவறாக எழுதியதற்கு, ஜானி ஜான் கான் சாலையில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?  அந்த சாலையில் காலையிலேயே பிரியாணி செய்து விற்பனைக்கு வைத்திருந்தவர்கள், கடையைத் திறக்க முடியாமல், கள்ளத்தனமாக, பாதி ஷட்டரை திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தததைப் பார்க்க முடிந்தது.  அதிமுக தொண்டர்களின் போராட்டத்தால், இவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருமானத்தை இழக்க நேரிட்டது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ?

அதிமுக அரசு ஒரு மங்குணி அரசு என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடிந்தாலும், நக்கீரன் விவகாரத்தை இந்த அரசு கையாண்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.  ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யையும், புரட்டையும் எழுதி வரும் நக்கீரனின்  மென்னியை முறிக்க வழியா இல்லை ?  நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா ?  காமராஜ் தன் மனைவி ஜெயசுதா பெயரில், வீட்டு மனையை அபகரித்துள்ளார், வீடு வைத்திருக்கும் போது, அதை மறைத்து பொய்யான சான்று அளித்து வீடு வாங்கியுள்ளார் என்று சிபி.சிஐடியிடம் புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகிறதே… அப்போதே காமராஜை கைது செய்திருந்தால், இன்று இப்படி எழுதுவார்களா ?

யாராவது இரண்டு பேர் தொடர்ந்து தும்மினால், “வடசென்னையில் மர்ம தும்மல் பரவுகிறது”  என்று செய்தி வெளியிடும் சன் டி.வி, இப்படிப் பட்ட ஒரு மிகப்பெரும் தாக்குதல் நடந்தும், மூச்சே விடவில்லை.   சன் டிவியின் மூமூமூத்த செய்தியாளர் ராமசெல்வராஜ் வந்திருந்தும், எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.

இந்த நேரத்தில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  மைலாப்பூர் சரக துணை ஆணையர் எஸ்.பாஸ்கரன் என்பவர்தான் இன்று பணியில் இருந்தார்.  அவரைப் போன்ற ஒரு மங்குணி அதிகாரியைப் பார்க்கவே முடியாது என்னும் வகையில், கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கென்ன என்று ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், திருவல்லிக்கேணியின் உதவி ஆணையர், செந்தில்குமரன், பம்பரமாக சுழன்று பணியாற்றியதாகட்டும்.  தடியடியோ பலமோ பிரயோகம் செய்யத் தடை இருந்த நேரத்தில், அந்த ரவுடிக் கூட்டத்தை கையாண்ட விதமாகட்டும், சளைக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாகட்டும்.  ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ… அப்படி இருந்தார் செந்தில்குமரன்.   வாழ்த்துக்கள் செந்தில் குமரன் அவர்களே…..

IMG_5398

IMG_5402

உதவி ஆணையர் செந்தில் குமரன்

நக்கீரன் மீதான தாக்குதல் குறித்து சவுக்கின் பிரத்யேக ஆல்பம்.

IMG_5278

போராட்டம் நடத்த வருகை தரும் அதிமுகவினர்

IMG_5288

 

அதிமுக மகளிர் அணியினர்

IMG_5289

கைது செய்யப் படும் அதிமுகவினர்

IMG_5290

IMG_5298

மங்குணி எஸ்.பி பாஸ்கரன்

IMG_5306

IMG_5318

IMG_5329

கடைகளை மூடச் சொல்லும் கவுன்சிலர் ஜின்னா

IMG_5341

IMG_5342

IMG_5344

காவலரை தாக்கப் பாயும் அதிமுக தொண்டர்

IMG_5348

IMG_5361

 

IMG_5364

IMG_5378

IMG_5379

IMG_5380

IMG_5413

IMG_5405

IMG_5423

சாணியைக் கழுவும் காவலர்

IMG_5429

IMG_5431

Thanks:savukku

அட அப்படியா… ? வெக்கங்கெட்ட நக்கீரன்…

கடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார்.   அந்தப் புகைப்படங்களை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.   அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.   நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார்.   அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார்.   நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார்.  விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்…  நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..

Thanks:savukku

நக்கீரன் பொய்ச் செய்திகளை வெளியிடுவது வழக்கமே.. காமராஜ்

நக்கீரன் பத்திரிக்கை, எப்படிப் பட்ட ஒரு மிகக் கேவலமான பத்திரிக்கை என்பதை சவுக்கு வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.   உண்மைகளை மறைப்பது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, நல்லவர்களை தூற்றுவது, பொய்யர்களையும், புரட்டுக் காரர்களையும், நல்லவர்களாக எழுதுவது (ஆ.ராசா போல) நக்கீரன் பத்திரிக்கைக்கு கைவந்த கலை என்பதை அறிவீர்கள். இது தவிரவும், நடிகை த்ரிஷா குளிக்கும் போது ரகசியமாக எடுத்த வீடியோ, இணையத்தில் உலவிய போது, அந்த படத்தை ஃப்ரேம், ஃப்ரேமாக போட்டு, இணைய வசதி இல்லாதவர்களிடமும் அதை எடுத்துச் சென்று, த்ரிஷாவை மானபங்கப் படுத்தியது நக்கீரனே….

 

நித்யானந்தாவை அம்பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ரஞ்சிதாவை மானபங்கப் படுத்தியதும் நக்கீரனே…. இது மட்டும் அல்லாமல், எண்ணிலடங்கா குடும்பங்களை நாசப் படுத்தியதில் நக்கீரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

 

இது தவிரவும், தற்போது, இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் 117 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட நக்கீரன், அவற்றில் 68 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கான முடிவுகள் அடுத்த இதழிலாம்.   அதாவது இவர்கள் கணக்குப் படி, திமுக கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.

 

நக்கீரன் பத்திரிக்கையும், அதன் இணை ஆசிரியரான குருமாராஜும் செய்த ஊழல்களை முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே.. சவுக்கு தளம் அதை அம்பலப்படுத்திய போது, சவுக்கு மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு, குருமாராஜ், சவுக்கைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார்.   சில பத்திரிக்கையாளர்கள் குருமாராஜைப் பற்றி தவறாக எழுதச் சொல்லி, சவுக்கைத் தூண்டுகிறார்கள் என்று குமுறினார். தான் அப்பழுக்கற்றவன் என்றார்…. நேர்மையின் உருவம் என்றார்….. ஆனால், அடுத்தடுத்து ஆதாரங்களோடு, சவுக்கு குருமாராஜை அம்பலப்படுத்தியதும், குருமாராஜின் வேஷம் கலைந்தது.

IMG_9359

இதற்கு முத்தாய்ப்பாக, டிசம்பர் மாதம், சிபிஐ குருமாராஜ் வீட்டில் நடத்திய சோதனைகள் அமைந்தன. முதலில், சிபிஐ எந்த ஆதாரங்களையும் எடுத்துச் செல்லவில்லை, எதையும் கைப்பற்றவில்லை என்று பொய்யுரை கூறிய குருமாராஜ், படிப்படியாக உண்மைகள் வெளிவந்ததும் வாயைப் பொத்திக் கொண்டார்.

 

அடுத்து, குருமாராஜ், சாதிக் மரணத்தில், வகித்த பங்கைப் பற்றியும் சவுக்கு செய்திகளை வெளியிட்டதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.   சிபிஐ தன்னைக் கைது செய்யுமோ என்ற அச்சத்திலே குருமாராஜ் இருப்பதாக குருமாராஜுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், நக்கீரன் பத்திரிக்கை பொய்ச் செய்திகளையும், உண்மைகளை திரித்தும், புகைப்படங்களை மோசடி செய்தும் வெளியிடுவது வழக்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.   இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேற எங்கும் கொடுக்கவில்லை….. மாவட்ட நீதிபதி முன்பாக அளித்துள்ளார். நக்கீரன் பொய்ச் செய்திகள் வெளியிடும் என்பதை நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியரான குருமாராஜே தெரிவித்த பிறகு, வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

 

குருமாராஜ் எங்கே இது போல சொன்னார் ?   மதுரை தினகரன் அலுவலகத்தில், நடந்த அந்த கொடூரச் செயலை மறந்திருக்க மாட்டீர்கள்…. அந்த வழக்கில் தான், இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப் பட்டது.

dinakaran

தினகரன் பணியாளர்கள் எரித்துக் கொல்லப் பட்ட உடனே, சன் டிவி, வெளியிட்ட தலைப்புச் செய்தி என்ன தெரியுமா ?

 

“ரவுடி அழகிரியின் அட்டகாசம்” என்பதுதான்..   அந்த செய்தி வெளியான போது, சட்டப் பேரவை நடந்து கொண்டிருந்தது.   வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டிருந்த கருணாநிதி, சட் டிவியில் என்ன செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். “ரவுடி அழகிரி” என்ற வார்த்தையை கேட்டவுடன், கொதித்துப் போன கருணாநிதி, குருமாராஜை அழைத்து, தாக்குதலுக்கு ‘அட்டாக் பாண்டி’ தான் காரணம் என நக்கீரனில் அட்டைப் பட செய்தி போடச் சொல்லி உத்தரவிட்டார்.

dinakaran_1

குருமாராஜ் பத்திரிக்கையாளராக இருந்தால், உண்மை என்ன, இதில் அழகிரியின் பங்கு என்ன என்பதையெல்லாம் விசாரிப்பார்.   அவர் ப்ரோக்கர் இல்லையா ? கருணாநிதியின் உத்தரவுப் படி அப்படியே செய்தியை வெளியிட்டார். நக்கீரன் இதழில், அட்டைப் படத்தில், அழகிரியைப் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் கொதித்துப் போய் தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூன்று பேரை கொன்று போட்டதாக செய்தி வெளியிடப் பட்டது.

 

எப்படி விசாரணை நடத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று நினைத்த கருணாநிதி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.   சிபிஐ தனது விசாரணையை முடித்த பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

 

இந்த நீதிமன்றத்தில் தான், குருமாராஜ், இப்படிப் பட்ட ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

1

சம்பவம் நடந்த அன்று, நக்கீரன் மதுரை நிருபர் ஒளி ராஜா மற்றும், புகைப்படக்காரர் அண்ணல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்து அனுப்பிய புகைப்படங்களையும் செய்தியையும் வைத்துத் தான் நக்கீரன் கவர் ஸ்டோரி வெளி வந்தது.

 

இந்த அண்ணல், மதுரை நீதிமன்றத்தில் விசாரணையின் போது சம்பவம் நடந்த நாளன்று தனக்கு வயிற்று வலி (அன்னைக்குன்னு பாத்து எப்பிடிடா உனக்கு வயிறு வலிக்குது) என்பதால், மிகவும் தாமதமாக, மதியம் 2 மணிக்குத் தான் தினகரன் அலுவலகம் சென்றதாகவும், அங்கே கடும் புகை இருந்ததாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து சென்னை நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இவர் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்திலோ, சம்பவம் நடக்கத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே இருந்ததாகவும், நக்கீரன் இதழில் வந்த அட்டைப் படம் உள்ளிட்ட படங்களை தான்தான் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

 

நிருபர் ஒளி ராஜா, இன்னும் சூப்பர். சம்பவம் நடந்த அன்று தான் அந்த இடத்திலேயே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்.

IMG_9358

இது தொடர்பாக சாட்சியம் அளித்தார் நக்கீரனின் இணை ஆசிரியர் குருமாராஜ்.   ஒளிராஜா மற்றும் அண்ணல் நக்கீரனில் பணியாற்று பவர்கள் தான்.   அவர்கள் இருவரும் அளித்த புகைப்படங்கள் மற்றும் செய்தியை வைத்துத் தான் நக்கீரன் 16.05.2007 நாளிட்ட கவர் ஸ்டோரி வந்தது.   ஆனால் அதற்குப் பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார் பாருங்கள் குருமாராஜ்….   அந்த புகைப்படங்களும், செய்தியும், சிடியில் வந்ததாம். ஆனால் எப்படி வந்தது என்பது தெரியாதாம். ஈமெயிலா, கொரியரா, தபாலா, அல்லது நேரிலா என்பது சுத்தமாக நினைவில் இல்லையாம்.   (திருவான்மியூர்ல பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குனதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ?) ‘நீங்கள் ஒளிராஜாவும், அண்ணலும் செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பியதாக தெரிவிக்கிறீர்கள், ஆனால், அவர்கள் நாங்கள் செய்தியும் அனுப்பவில்லை, புகைப்படமும் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்களே…. என்று கேட்டதற்கு, ‘அதுதான் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்.

 

குருமாராஜை, கவுண்டமணி பாணியில் தான் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.   ‘டேய் பச்சிலை புடுங்கி…. ஃபோட்டோ எப்டிடா வந்துச்சு ?’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் என்பதால் கேட்கவில்லை.

IMG_9358

அடுத்து குருமாராஜ், முக்கிய விஷயம் ஒன்றை தெரிவிக்கிறார். நக்கீரன் இதழில், புகைப்படங்களை, மார்ஃபிங் எனப்படும், ஒட்டு வேலை செய்து வெளியிடுவது வழக்கம் தான்.   இது போல பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம்.   முதலமைச்சரும், தயாநிதி மாறனும், அட்டாக் பாண்டியோடு இருப்பது போல, வெளியிட்டிருக்கும் புகைப்படமே நாங்கள் மார்ஃபிங் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார்.

kamaraj-060411

 

kamaraj-06048

 

kamaraj--c-060411

 

மேலும், தனது சாட்சியத்தில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள் அயோக்கியர்களே…. !) இதை விட, குருமாராஜ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள்…..   அய்யய்யய்யய்யோ…. சூப்பரோ சூப்பர்.   “ஒரு ஆணின் முகத்தை, ஒரு பெண்ணின் ஒடலோடு பொறுத்தி, பல முறை நக்கீரனில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.

 

எப்படி இருக்கிறது ? இதுதான் நக்கீரன். இந்த பத்திரிக்கையை 8 ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நக்கீரன் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா ?

 

தாங்கள் அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும், நான் அனுப்பவில்லை என்று கூறிய நக்கீரன் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டாம் ? அந்த இரண்டு ஊழியர்களும், இன்னும் நக்கீரனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   இணை ஆசிரியராக இருக்கும் குருமாராஜே இப்படி பொய் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லும் போது, மற்றவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

DSC_5655

குருமாராஜைப் பற்றி சவுக்கு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பொறுப்பை தனது வாசகர்களிடமே விட்டு விடுகிறது.

Thanks:சவுக்கு