அன்பார்ந்த சவுக்கு வாசகர்களே…. நக்கீரன் இதழின் தரத்தைப் பற்றியும், எவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் செல்லக் கூடும் என்பதைப் பற்றியும், சவுக்கு பல முறை எழுதியிருக்கிறது.
நேற்று, சவுக்கு தளத்தில், நக்கீரன் அலுவலகத்தில் உள்ளே நடந்த மோதல்கள் குறித்து, செய்தி வெளியிடப் பட்டிருந்தது. அந்தச் செய்தி இதுதான்.
“நக்கீரன் வார இரு முறை வார இதழின் நிருபர்கள் கூட்டம், 29.05.2011 அன்று காலை 10மணிக்கு நக்கீரன் அலுவலகத்தில் நடந்தது..
தமிழகம் முழுவதும் நிருபர்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து, அதை செய்தியாக்க வேண்டும் என்று கூறிப்பிடப்பட்டிருந்தது.
இணை ஆசிரியர் காமராஜ் தலைமை நிருபர்கள் கூட்டம் தொடங்கியது, ஆசிரியர் கோபால் வந்தவுடன், எங்க தம்பி சிவசுப்ரமணியனை காணவில்லை உடனே காமராஜ், அவரை கூப்பிடவில்லை, ஏன்.. சிவா நம்ம வளர்ச்சிக்கு உழைத்தவன், உங்கள் விருப்பு வெறுப்பை நிருபர்களிடம் காட்டாதீர்கள், நக்கீரன் வளர்ச்சி என்பதே வீரப்பனை வைத்துதான், அதில் தம்பி சிவாதான் முக்கிய பங்கு ஆற்றினார், என்று கூறிவிட்டு எழுந்து அவர் அறைக்கு போய்விட்டார்..
நிருபர்களிடம் கருத்து கேட்ட போது, ஈரோடு நிருபர் ஜிவா, நாம் திமுக ஆதரவு பத்திரிகை என்பதை நிருபித்து வருகிறோம், நடு நிலை பத்திரிகையாக இருந்தால் மட்டுமே விற்பனை உயரும் என்றவுடன், காமராஜ் உனக்கு என்ன தெரியும் செய்தி அனுப்பவது இல்லை, வீரப்பன் பெயரை சொல்லி உங்க பொழப்பு ஓடுது என்ற கண்டபடி பேச, ஜிவா கூட்டத்திலிருந்து வெளியேறி கோபால் புகார் கூறினார், திரும்பவும் கூட்டத்திற்கு வந்த கோபால், ஜிவாவிடம் எதாவது கேட்க வேண்டுமானால் தனியாக கேளுங்கள், அவர்கள் வீரப்பன் தொடபான வழக்கில் ஆஜராவதில் காலம் போய்விடுகிறது, சீனியர் நிருபர்களை எல்லாம், அனைவர் முன்னாடி பேசுவது சரியல்ல என்று கூறிவிட்டு வெளியேறினார்..
காமராஜ் செல்போன் பேச கூட்ட அறையிலிருந்து வெளியே வர, நிருபர் பிரகாஷ், ஜிவாவை பார்த்து ஆசிரியரிடம் சொன்னால் பருப்பு வேகாது, காமராஜ் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போய் பொழப்பை நடத்து என்று கிண்டலடிக்க, ஜிவா, பிரகாஷ்யை அடிக்க பாய, கூட்டத்தில் அடிதடி நடந்தது. பிறகு காமராஜ் சமாதானம் செய்தார்..
கடைசியில் காமராஜ், ஆசிரியரை ஜெயலுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா, மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்துள்ளார்(இதை எல்லாம் ஒருமையில் பேசினார் அவ, இவ என்று) ஒவ்வொரு நிருபரும் அதிமுகவுக்கு எதிராக செய்தி சேகரித்து அனுப்ப வேண்டும்..
அதிமுக எதிராக ஆதாரத்துடன், புகைப்படத்துடன் செய்தி கொடுக்கும் நிருபர்கள் மாதம் மாதம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்பட்டும் என்று காமராஜ் பேசிய பிறகு கூட்டம் முடிந்தது..”
இதைப் படித்த நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் தனது 96770 91357 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார். இது இதழியல் நெறிகளை மீறிய செயல் என்று, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் கருத்து தெரிவித்தார். அவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. நம்மை கடிந்து கொள்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் ? எடுத்த எடுப்பில் அவதூறான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதா ?
நக்கீரன் எடிட்டோரியல் அறையில் நடந்தவைகளை எழுதுவதற்கு சவுக்குக்கு உரிமை இல்லை என்றால், நித்யானந்தாவின் படுக்கையறையில் நடந்தவைகளை படம் பிடித்துக் காட்டுவதற்கு மட்டும் நக்கீரன் இதழுக்கு உரிமை உண்டா ?
சவுக்குக்கு தகவல் சொல்லுபவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து சொல்வார்கள். அவற்றின் நம்பகத்தன்மையை பரிசோதித்த பிறகே, அவை பதிவேற்றப் பட்டு வருகின்றன. சவுக்குக்கு யார் தகவல் தருகிறார்கள் என்பது குறித்த எவ்வித புரிதலுமின்றி, சில பத்திரிக்கையாளர்களைப் பற்றியும், சில காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், மிகவும் கொச்சையாக பதிவேற்ற முடியாத வார்த்தைகளால் இன்று காலை 10 மணிக்கு, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை அர்ச்சனை செய்தார்.
பிரகாஷ் இது போல அவதூறான வார்த்தைகளால் சவுக்கை ஏசியதால், அது சவுக்குக்கு அவமானம் அல்ல…. இது போன்ற தரந்தாழ்ந்த நபர்களை தலைமை நிருபராக வைத்திருப்பதன் மூலம், நக்கீரன் இதழின் தரம் தெரிகிறது.
இந்த உரையாடலின் ஒலிப்பதிவை சவுக்கு அப்படியே சமர்ப்பிக்கிறது. மிக மிக அவதூறான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது இந்த உரையாடல். வாசகர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.
{mp3}Record003{/mp3}
Thanks :Savukku