நக்கீரன் பொய்ச் செய்திகளை வெளியிடுவது வழக்கமே.. காமராஜ்

நக்கீரன் பத்திரிக்கை, எப்படிப் பட்ட ஒரு மிகக் கேவலமான பத்திரிக்கை என்பதை சவுக்கு வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.   உண்மைகளை மறைப்பது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, நல்லவர்களை தூற்றுவது, பொய்யர்களையும், புரட்டுக் காரர்களையும், நல்லவர்களாக எழுதுவது (ஆ.ராசா போல) நக்கீரன் பத்திரிக்கைக்கு கைவந்த கலை என்பதை அறிவீர்கள். இது தவிரவும், நடிகை த்ரிஷா குளிக்கும் போது ரகசியமாக எடுத்த வீடியோ, இணையத்தில் உலவிய போது, அந்த படத்தை ஃப்ரேம், ஃப்ரேமாக போட்டு, இணைய வசதி இல்லாதவர்களிடமும் அதை எடுத்துச் சென்று, த்ரிஷாவை மானபங்கப் படுத்தியது நக்கீரனே….

 

நித்யானந்தாவை அம்பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ரஞ்சிதாவை மானபங்கப் படுத்தியதும் நக்கீரனே…. இது மட்டும் அல்லாமல், எண்ணிலடங்கா குடும்பங்களை நாசப் படுத்தியதில் நக்கீரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

 

இது தவிரவும், தற்போது, இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் 117 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட நக்கீரன், அவற்றில் 68 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கான முடிவுகள் அடுத்த இதழிலாம்.   அதாவது இவர்கள் கணக்குப் படி, திமுக கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.

 

நக்கீரன் பத்திரிக்கையும், அதன் இணை ஆசிரியரான குருமாராஜும் செய்த ஊழல்களை முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே.. சவுக்கு தளம் அதை அம்பலப்படுத்திய போது, சவுக்கு மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு, குருமாராஜ், சவுக்கைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார்.   சில பத்திரிக்கையாளர்கள் குருமாராஜைப் பற்றி தவறாக எழுதச் சொல்லி, சவுக்கைத் தூண்டுகிறார்கள் என்று குமுறினார். தான் அப்பழுக்கற்றவன் என்றார்…. நேர்மையின் உருவம் என்றார்….. ஆனால், அடுத்தடுத்து ஆதாரங்களோடு, சவுக்கு குருமாராஜை அம்பலப்படுத்தியதும், குருமாராஜின் வேஷம் கலைந்தது.

IMG_9359

இதற்கு முத்தாய்ப்பாக, டிசம்பர் மாதம், சிபிஐ குருமாராஜ் வீட்டில் நடத்திய சோதனைகள் அமைந்தன. முதலில், சிபிஐ எந்த ஆதாரங்களையும் எடுத்துச் செல்லவில்லை, எதையும் கைப்பற்றவில்லை என்று பொய்யுரை கூறிய குருமாராஜ், படிப்படியாக உண்மைகள் வெளிவந்ததும் வாயைப் பொத்திக் கொண்டார்.

 

அடுத்து, குருமாராஜ், சாதிக் மரணத்தில், வகித்த பங்கைப் பற்றியும் சவுக்கு செய்திகளை வெளியிட்டதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.   சிபிஐ தன்னைக் கைது செய்யுமோ என்ற அச்சத்திலே குருமாராஜ் இருப்பதாக குருமாராஜுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், நக்கீரன் பத்திரிக்கை பொய்ச் செய்திகளையும், உண்மைகளை திரித்தும், புகைப்படங்களை மோசடி செய்தும் வெளியிடுவது வழக்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.   இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேற எங்கும் கொடுக்கவில்லை….. மாவட்ட நீதிபதி முன்பாக அளித்துள்ளார். நக்கீரன் பொய்ச் செய்திகள் வெளியிடும் என்பதை நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியரான குருமாராஜே தெரிவித்த பிறகு, வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

 

குருமாராஜ் எங்கே இது போல சொன்னார் ?   மதுரை தினகரன் அலுவலகத்தில், நடந்த அந்த கொடூரச் செயலை மறந்திருக்க மாட்டீர்கள்…. அந்த வழக்கில் தான், இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப் பட்டது.

dinakaran

தினகரன் பணியாளர்கள் எரித்துக் கொல்லப் பட்ட உடனே, சன் டிவி, வெளியிட்ட தலைப்புச் செய்தி என்ன தெரியுமா ?

 

“ரவுடி அழகிரியின் அட்டகாசம்” என்பதுதான்..   அந்த செய்தி வெளியான போது, சட்டப் பேரவை நடந்து கொண்டிருந்தது.   வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டிருந்த கருணாநிதி, சட் டிவியில் என்ன செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். “ரவுடி அழகிரி” என்ற வார்த்தையை கேட்டவுடன், கொதித்துப் போன கருணாநிதி, குருமாராஜை அழைத்து, தாக்குதலுக்கு ‘அட்டாக் பாண்டி’ தான் காரணம் என நக்கீரனில் அட்டைப் பட செய்தி போடச் சொல்லி உத்தரவிட்டார்.

dinakaran_1

குருமாராஜ் பத்திரிக்கையாளராக இருந்தால், உண்மை என்ன, இதில் அழகிரியின் பங்கு என்ன என்பதையெல்லாம் விசாரிப்பார்.   அவர் ப்ரோக்கர் இல்லையா ? கருணாநிதியின் உத்தரவுப் படி அப்படியே செய்தியை வெளியிட்டார். நக்கீரன் இதழில், அட்டைப் படத்தில், அழகிரியைப் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் கொதித்துப் போய் தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூன்று பேரை கொன்று போட்டதாக செய்தி வெளியிடப் பட்டது.

 

எப்படி விசாரணை நடத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று நினைத்த கருணாநிதி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.   சிபிஐ தனது விசாரணையை முடித்த பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

 

இந்த நீதிமன்றத்தில் தான், குருமாராஜ், இப்படிப் பட்ட ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

1

சம்பவம் நடந்த அன்று, நக்கீரன் மதுரை நிருபர் ஒளி ராஜா மற்றும், புகைப்படக்காரர் அண்ணல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்து அனுப்பிய புகைப்படங்களையும் செய்தியையும் வைத்துத் தான் நக்கீரன் கவர் ஸ்டோரி வெளி வந்தது.

 

இந்த அண்ணல், மதுரை நீதிமன்றத்தில் விசாரணையின் போது சம்பவம் நடந்த நாளன்று தனக்கு வயிற்று வலி (அன்னைக்குன்னு பாத்து எப்பிடிடா உனக்கு வயிறு வலிக்குது) என்பதால், மிகவும் தாமதமாக, மதியம் 2 மணிக்குத் தான் தினகரன் அலுவலகம் சென்றதாகவும், அங்கே கடும் புகை இருந்ததாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து சென்னை நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இவர் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்திலோ, சம்பவம் நடக்கத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே இருந்ததாகவும், நக்கீரன் இதழில் வந்த அட்டைப் படம் உள்ளிட்ட படங்களை தான்தான் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

 

நிருபர் ஒளி ராஜா, இன்னும் சூப்பர். சம்பவம் நடந்த அன்று தான் அந்த இடத்திலேயே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்.

IMG_9358

இது தொடர்பாக சாட்சியம் அளித்தார் நக்கீரனின் இணை ஆசிரியர் குருமாராஜ்.   ஒளிராஜா மற்றும் அண்ணல் நக்கீரனில் பணியாற்று பவர்கள் தான்.   அவர்கள் இருவரும் அளித்த புகைப்படங்கள் மற்றும் செய்தியை வைத்துத் தான் நக்கீரன் 16.05.2007 நாளிட்ட கவர் ஸ்டோரி வந்தது.   ஆனால் அதற்குப் பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார் பாருங்கள் குருமாராஜ்….   அந்த புகைப்படங்களும், செய்தியும், சிடியில் வந்ததாம். ஆனால் எப்படி வந்தது என்பது தெரியாதாம். ஈமெயிலா, கொரியரா, தபாலா, அல்லது நேரிலா என்பது சுத்தமாக நினைவில் இல்லையாம்.   (திருவான்மியூர்ல பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குனதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ?) ‘நீங்கள் ஒளிராஜாவும், அண்ணலும் செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பியதாக தெரிவிக்கிறீர்கள், ஆனால், அவர்கள் நாங்கள் செய்தியும் அனுப்பவில்லை, புகைப்படமும் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்களே…. என்று கேட்டதற்கு, ‘அதுதான் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்.

 

குருமாராஜை, கவுண்டமணி பாணியில் தான் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.   ‘டேய் பச்சிலை புடுங்கி…. ஃபோட்டோ எப்டிடா வந்துச்சு ?’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் என்பதால் கேட்கவில்லை.

IMG_9358

அடுத்து குருமாராஜ், முக்கிய விஷயம் ஒன்றை தெரிவிக்கிறார். நக்கீரன் இதழில், புகைப்படங்களை, மார்ஃபிங் எனப்படும், ஒட்டு வேலை செய்து வெளியிடுவது வழக்கம் தான்.   இது போல பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம்.   முதலமைச்சரும், தயாநிதி மாறனும், அட்டாக் பாண்டியோடு இருப்பது போல, வெளியிட்டிருக்கும் புகைப்படமே நாங்கள் மார்ஃபிங் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார்.

kamaraj-060411

 

kamaraj-06048

 

kamaraj--c-060411

 

மேலும், தனது சாட்சியத்தில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள் அயோக்கியர்களே…. !) இதை விட, குருமாராஜ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள்…..   அய்யய்யய்யய்யோ…. சூப்பரோ சூப்பர்.   “ஒரு ஆணின் முகத்தை, ஒரு பெண்ணின் ஒடலோடு பொறுத்தி, பல முறை நக்கீரனில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.

 

எப்படி இருக்கிறது ? இதுதான் நக்கீரன். இந்த பத்திரிக்கையை 8 ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நக்கீரன் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா ?

 

தாங்கள் அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும், நான் அனுப்பவில்லை என்று கூறிய நக்கீரன் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டாம் ? அந்த இரண்டு ஊழியர்களும், இன்னும் நக்கீரனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   இணை ஆசிரியராக இருக்கும் குருமாராஜே இப்படி பொய் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லும் போது, மற்றவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

DSC_5655

குருமாராஜைப் பற்றி சவுக்கு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பொறுப்பை தனது வாசகர்களிடமே விட்டு விடுகிறது.

Thanks:சவுக்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s