ஒருபிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேட்க்கும் கேள்விகள்..
கிரிமினலாக யோசிக்கும் நக்கீரன் கோபாலு..!!
உனது அவதூறுகளில் பாதிக்கபட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதின் அடிப்படையில் உன்னிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..
*என் மீது நீ கொடுத்திருக்கும் குற்றசாட்டுகள் அத்தனைக்கும் உன்னிடம் நான் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை அதற்கு தகுதியானவன் நீ இல்லை என்றாலும் கூட, நீ தொட்டு பார்த்திருப்பது எனது குடும்பத்தை விட அதிகம் நேசிக்கும் எனது தொழிலை அதன் வலியை என்பதால் விவரிக்கிறேன்..
*அப்படி உனக்கென்ன காழ்ப்புனர்ச்சி? கோடிகளை சுருட்டிய கூரியர் கிள்ளாடி என்கின்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருக்கிறாய்..இதற்காக யாரிடம் கை நீட்டினாய்? வழக்கம் போல செய்திபோடுவதற்கு முன்பாக நடத்தபடும் பேரத்தை என்னிடமும் செய்திருக்கலாமே? ஏனெனில் தன்னிலை விளக்கமெல்லாம் நீ கேட்க முற்படமாட்டாய் என்பதை தமிழகமே அறிந்த்து..என்னிடம் ஒரு வார்த்தை கூட விசாரிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்களிடமும்,பிக்காளிகளிடமும் மொத்தமாக வாங்கிவிட்டாயா?
*உனது பத்திரிக்கை பேரத்திற்காக கடன் வாங்கி ,சொத்தை விற்று நகைகளை விற்று வங்கிகளிலும் கடன் வாங்கி தொழில் செய்யும் நானும் எனது ஏஜென்சிகளும் தொழிலை மூடவேண்டுமா?
*வெறும் 500 இடங்களுக்கு 50000 வின்னப்பங்கள் ஏஜென்சி பெர வேண்டி வந்திருந்தன, நாங்கள் உனது கேடுகெட்ட சிந்தனையை போல சிந்திதிருந்தால் 5000 பேர்வரை (ஒரு எரியாவிற்கு 10 பேர் வரை) கொடுத்திருந்திருக்க முடியும் ( நீ சொல்வது போல கோடிகளில் சுருட்டியிருக்க முடியும்)ஆனால் நாங்கள் அந்த குறிப்பிட்ட ஏரியாவிற்கு ஒருவருக்கு மட்டுமே கொடுத்தோம்..
*இது அக்டோபர் மாதமே நடந்து முடிந்து விட்டது..அப்படியே உன்னுடைய கூற்று உண்மையென்றாலும் அப்போதே தலைமறைவாகி இருக்கமுடியும்..ஆனால் இன்று வரை உன்னை போன்ற அயோக்கியர்களின் சூழ்ச்சிகளுக்கிடையிலும் நிறுவனம் நல்ல முறையில் இயங்கி வருகிறது.. எதன் அடிப்படையில் அப்படி ஒரு செய்தி போட்டாய்? கூட்டம் கூடியது என்பதற்காகவா?உனக்கு எதிராக எத்தனை ஆயிரம்அயோக்கியர்களை கூட்ட வேண்டும்/?
*இன்று வரை 35 கோடி ரூபாய் வரை இந்த நிருவனதிற்காக முதலீடு செய்திருக்கிறேன்… அது எப்படி என்கிண்ற கனக்கு என்னிடம் இருக்கிறது உனது பத்திரிக்கை சங்கத்தில் அதை சமர்பிக்க தயாராய் இருக்கிறேன்,இதில் ஊடகத்துறைக்கு விளம்பரதிற்காக மட்டும் 15 கோடி வரை செலவு செய்துள்ளேன்(உனது சக ஊடக நண்பர்களிடம் விசாரித்து கொள்)
* நீ நல்லவன் என்றால் உனது தொழில் /சொத்து கணக்கை அதேபத்திரிக்கையாளர் சங்கதில் காட்டுவதற்கு தயாரா?எனது நிறுவண/சொத்து கணக்கை காட்டி நானும் எனது பிறப்பும் உத்தமம் என்பதை நிரூபிக்க என்னால் முடியும்..உன்னால் முடியுமா?அயோக்கியதனதிற்கு பெயர் போனவனே.. *இளம் தொழில்முனைவர்களை ஊக்கபடுத்தி அவர்களையும், தமிழகத்தையும் உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டாம்..குறைந்தபட்ச்சம் தலைகுனிவை உண்டாக்கமல் மட்டுமாவது இரு..
*ஒரு வடிகட்டிய கிரிமினலிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதென்பது முட்டால்தனமென்று எனக்கு தெரியும்..எனது தரப்பு நியாயத்தை,தன்னிலை விளக்கத்தை சொல்வதற்காக உனக்கு இந்த மினஞ்சலை அனுப்பவில்லை…இதன் மூலம் உன்னை எச்சரிக்கிறேன்.. நீ இனியும் மாறவில்லையென்றால் உன்னை இந்த சமூகம் மாற்றும்,, நீதிமன்றங்கள் உன்னை மாற்றும்..
(குறிப்பு:யார் எழுதினாலும் பேனா எழுதும்/யார் ஆதாரம் கொடுத்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்/யார் செலவு செய்தாலும் பத்திரிக்கை அச்சிட முடியும்) இப்படிக்கு,
கே.எஸ்.அன்வர்,
நான்ஸ்டாப் கூரியர் மற்றும் கார்கொ
(நிர்வாக இயக்குனர்)