பயங்கரவாதி நக்கீரன் கோபால்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் சகோ-பி.ஜெ

 

நக்கீரனில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க இந்தக் கட்டுரை என்றாலும் இதனால் நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் கோபால் பற்றி என் பாதிப்புக்கு ஏற்ப விமர்சிப்பதற்கு உரிமை எனக்கு உள்ளது. எனது நிலையில் இருந்து இதை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

யார் இந்த கோபால் மாமா

என்னுடைய கடந்த கால வாழ்க்கை என்று இவன் பொய்யை வெளியிட்டுள்ளான். நான் இவனது கடந்த கால வாழ்க்கையின் உண்மையில் சிறு பகுதியுடன் ஆரம்பிக்கிறேன்.
ஷியாம் அவர்கள் நடத்தி வந்த தராசு பத்திரிகையில் ஓவியம் வரைபவனாக இருந்தவன் தான் நக்கீரன் கோபால் என்பவன். இவனுக்கு படம் வரையத் தெரியுமே தவிர ஒழுங்காக எழுதக் கூட தெரியாது.

இப்போதும் மற்றவர்கள் எழுதுவதைத் தான் தன் பெயரில் வெளியிட்டு வருகிறான்.

தராசு பத்திரிகையில் இருந்து கூலிக்கு எழுதும் சிலரைப் பிடித்து வந்து நக்கீரன் பத்திரிகையை ஆரம்பித்தான். ஆனால் பத்திரிகை ஓடவில்லை

 

 

இந்த நிலையில் இந்தியா டுடே பத்திரிகை சந்தனக்காட்டுக்கு தனது செய்தியாளர்களை அனுப்பி வீரப்பனிடம் வீடியோ பேட்டி எடுத்தது. கோபால் அந்த செய்தியாளரைச் சரிக்கட்டி அந்த வீடியோவை வாங்கினான். இந்தியா டுடே வெளியிடுவதற்கு முன்பே வீரப்பன் பேட்டியை இவன் வெளியிட்டான். தனது செய்தியாளர்கள் கஷ்டப்பட்டு காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்ததாக புளுகி பல வாரங்கள் தொடர் வெளியிட்டான். இப்போது தான் நக்கீரன் என்ற பத்திரிகை உலகுக்குத் தெரிய வந்தது.

இவனது அறிமுகமே அயோக்கியத்தனத்தில் தான் ஆரம்பமாகிறது.

 

நக்கீரன் போன்ற பத்திரிகை நடத்த மூளை தேவை இல்லை. பணத்துக்காக எதையும் செய்யும் கேடு கெட்ட குணமும் கற்பனையும் காமராஜ் போல் காசுக்காக எதையும் செய்யும் இழிபிறவிகளின் உதவியும் இருந்தால் போதுமானது என்பதை தராசு பத்திரிகை அனுபவத்தில் இவன் கற்றுக் கொண்டான்.

 

உதாரணமாக ராமதாஸ், முதல்வரைத் தனியாகச் சந்தித்தார் என்ற செய்தி இவனுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இருவரும் பேசிக் கொண்டது இருவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் இவன் எழுதுவான். இருவர் மட்டுமே உரையாடிய போது பேசிக் கொண்டது இவனுக்கு எப்படித் தெரியும்? என்று சிந்திக்க மறுக்கும் மக்களின் பலவீனம் தான் இவனுக்கு மூலதனம்

ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகை விற்பனைக்காக மாமா வேலைக்கு நிகரான செய்திகளை இவன் எழுதலானான். ஆட்டோ சங்கர் கதை என்ற பெயரில் பெண்களை சூறையாடிய கதைகளை கற்பனை செய்து எழுதி காசாக்கினான். அவ்வளவும் ஆபாசம் புளுகு மூட்டை.

நடிகைகள் பற்றி அந்தக் கால இந்து நேசன் பாணியில் காமக் களஞ்சியத் தொடர் எழுதினான். இதில் பெரும்பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் காம உணர்வை ஊட்டிய எழுத்து விபச்சாரம் தான்

இவன் எழுதியது போல் இவனது குடும்பத்து பெண்களின் காமச் சேட்டைகள் என்று நாம் எழுதினால் அதை இவன் ஜீரணித்துக் கொள்வானா? கோபால் வீட்டுக்குள் ஒருவன் போவதை மட்டும் பார்த்து விட்டு உள்ளே நடந்ததை நாம் இவனைப் போல் எழுதினால் அதை ஜீரணித்துக் கொள்வானா?

 

சட்ட விரோதமாக சந்தன வீரப்பனைச் சந்தித்து தேசத்துக்குத் துரோகம் செய்தவன். சந்தன வீரப்பன் நாடகத்தில் கோடிகளைச் சுருட்டியவன். எழுத்துலகில் காசுக்காக எதையும் செய்யும் இழி பிறவி இவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. அடுத்த இடம் காமராஜ் என்ற எச்சில் பொறுக்கிக்குக் கொடுக்கலாம்.

ரஜினி பெயரை ஆதாயமாக்க ரஜினி ரசிகன் என்று பத்திரிகை நடத்தினான். ஒவ்வொரு நடிகன் பெயரிலும் பத்திரிகக் நடத்தி இளைஞர்களைக் கெடுத்தவன். காசு சம்பாரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கேடு கெட்டவன் தான் இந்தக் கோபால்.

கற்பனை கலந்து எத்தனையோ பெண்களைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி அவர்களின் குடும்ப வாழ்வைச் சீரழித்தவன். முஸ்லிம் குடும்பங்களில் ஏற்படும் குடும்பச்
சண்டைக்குள் நுழைந்து எதையாவது எழுதி அவர்களின் வாழ்வையே சீரழித்து பணம் சம்பாரிக்கும் அற்பன் தான் இந்தக் கோபால்.

இவனுக்கு இதன் வலியை உணரச் செய்வதற்காக இவனது அந்தரங்கச் சேட்டைகள் பற்றியும் மற்றவர்களின் குடும்பம் பற்றி இவன் எழுதுவது போல் இவனது குடும்பம் பற்றியும் யாராவது எழுதினால் நல்லது. இவனுக்கு கொஞ்சமும் சளைக்காத காம?ராஜ் என்பவன் பற்றியும் அவன் எழுதுவது போன்ற நடையில் யாராவது எழுதினால் தான் இவன் அடங்குவான்.

பத்திரிகை இப்போது சுத்தமாக படுத்து விட்டது. எனவே தான் நபிகள் நாயகம் பற்றி இரண்டு தடவை கற்பனை செய்தி வெளியிட்டு பத்திரிகை விற்பனையைத் தூக்கி நிறுத்தப் பார்த்தான். இவனை இப்படியே விட்டால் தொடர்ந்து வாலாட்டுவான் என்பதால் இவனுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.

இனிமேல் இவன் நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக எழுதினால் பத்திரிகை அலுவகம் இருக்காது என்ற பாடத்தை தவ்ஹீத் ஜமாஅத் படித்துக் கொடுத்தது.

புலி கேசியான புண்ணாக்கு தொடர் எழுதி நிமிர்த்தப் பார்த்தான். ஒன்றும் கை கூடவில்லை

அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு தான் அட்ரஸ் இல்லாத மூன்று பேரின் பேட்டி என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப்பது.

 

இவன் ஒரு எழுத்து விபச்சாரி என்பதற்கு ஆதாரம் யாரைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் அவர்களின் கருத்தையும் கேட்டு பிரசுரிக்க வேண்டும், என்னிடம் இது பற்றி கருத்து கேட்காமல் வெள்யிட்டதில் இருந்து இவன் எழுத்து விபச்சாரி என்பது உறுதியாகிறது.

எழுத்துலக மாமா நக்கீரன் கோபால் கூறுகிறான்

பேட்டியில் இருந்து

இப்படிப்பட்ட சூழலில் தான், 1997 டிசம்பர் 6-ந்தேதி பாண்டியன், சேரன், ஆலப்புழை ரயில் களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து தமிழகத்தை உலுக்கியது. பி.ஜே.வின் வன்முறை கலந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான் இதனை செய்திருக்கிறார்கள். குண்டு வைக்க தூண்டியது பி.ஜே.தான். இதனால் அப்போதே பி.ஜே.வை அழைத்து விசாரித்தது தமிழக உளவுத்துறை. சந்தேக வலை தன்னை சுற்றி விழுவதை அறிந்த பி.ஜே., குண்டு வைத்தவர்களை சொல்கிறேன் என்று சொல்லி எங்களை காட்டிக் கொடுத்தார். எங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் குண்டு வைக்கவே கிடையாது” என்று விவரித்தனர்.

இப்படி மூவர் சொன்னதாக இவன் எழுதுகிறான்.

நமது விளக்கம்

இவர்கள் குண்டு வைக்கவில்லை என்று மூவரும் சொல்கின்றனர். குண்டு வைக்காத இவர்களைப் பற்றி நான் காவல் துறையில் சொல்லி இருந்தால் அது எப்படி காட்டிக் கொடுத்ததாக ஆகும்? குண்டு வைக்காத இவர்கள் மீது நான் பொய்யாக தகவல் கொடுத்தால் அதை ஏற்று காவல் துறை வழக்கு போட்டிருக்குமா?

நாங்கள் தான் குண்டு வைத்தோம்; அதை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று இவர்கள் கூறினால் தான் நான் காட்டிக் கொடுத்தாக ஆகும். நாங்கள் குண்டு வைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்’ பீஜே காட்டிக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள். முரண்பட்ட இரண்டில் எது உண்மை.

குண்டு வைக்காத நாலு அப்பாவிகளைப் பற்றி இவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே காவல் துறை வழக்குப் பதிவு செய்யுமா? நான் தமிழக முதல்வராக இருந்து அப்படிச் சொன்னால் வேண்டுமானால் நடக்கலாம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு குறித்து காவல் துறை என்னை விசாரித்தது உண்மை. அதற்குக் காரணம் குண்டு வைத்தவர்கள் என் பெயரையும் இழுத்து விட்டது தான். அதை அல் உம்மா தொடரில் விளக்கியுள்ளேன்.

பேட்டியில் இருந்து

குண்டு வெடிப்புகளை தவிர்த்து பார்த்தோமேயானால்… முஸ்லிம்களின் மதகுருக்கள் கொல்லப்பட்டதற்கும் பின்னணியில் இவர் இருந்துள்ளார். உதாரணத்திற்கு… 8.8.97-ல் கே.கே நகர் பள்ளிவாசல் மதகுரு கமருஸ்ஜமான் கொல்லப்படுகிறார். பி.ஜே.வி.ன் தூண்டுதலில் இது நடந்தது. பள்ளி ஜமாத்தின் புகாரிலே பி.ஜே. பெயர் இருக்கிறது

என்று மூவரும் சொன்னதாக கோபால் சொல்கிறான்.

எனது பதில்

கொல்லப்பட்ட மத குருக்கள் யார்?

கொன்றவர்கள் யார்?

பீஜே சொல்லித் தான் நான் மத குருக்களைக் கொலை செய்தேன் என்று யாராவது போலீஸிலோ நீதிமன்றத்திலோ சொல்லி இருக்கிறார்களா?

அப்படிச் சொல்லி விட்டு பீஜே பின்னணியில் இருந்தார் என்று கூறினால் தான் அது பதில் சொல்லத் தக்கதாக இருக்கும்.

பள்ளி ஜமாஅத்தின் புகாரிலேயே பிஜேயின் பெயர் இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பள்ளி ஜமாஅத்தின் புகாரின் என் பெயர் இருக்கிறதா என்பது நினைவில் இல்லை. ஆனால் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் ஒருவர் கொல்லப்பட்டால் அதன் பின்னணியில் பலர் சந்தேகிக்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம். அப்பட்டமாகத் தெரிந்த திருவிடைச்சேரி கொலையில் என் பெயரை சிலர் இழுத்து விடுவதை பார்க்கிறோம்.

ஆனால் கமருல் ஜமான் குடும்பத்தைப் பள்ளி நிர்வாகம் கை விட்டது. அந்தக் குடும்பத்தினர் நான் அமைப்பாளராக இருந்த தமுமுகவை அணுகி உதவி கேட்டனர். அவர்களுக்காக உணர்வு இதழ் மூலம் நிதி திரட்டி அந்தத் தொகையை வழங்கினோம். அவரது பிள்ளைகள் படிப்புக்கும் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்தோம். பள்ளி நிர்வாகிகள் என் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும் அவரது குடும்பத்தினர் அதைப் பொய்யாக்கி விட்டனர்.

குண்டு வைக்காத இவர்கள் பெயரை நான் சொன்னதும் இவர்களைக் காவல் துறை கைது செய்தது என்று கூறுகின்றனர். அப்படியானால் பள்ளிவாசல் நிர்வாகம் என் பெயரைச் சொல்லி இருந்தும் காவல் துறை அந்த வழக்கை ஏன் என் மீது போடவில்லை. அன்று அரசுக்கும் காவல் துறைக்கும் நாங்கள் (தமுமுக) கடும் எதிரிகளாக இருந்தோம். எங்களுக்கு எதிரான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு வாக்கு மூலம் இருந்து அது உண்மையாகவும் இருந்தால் என்னைத் தானே அந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்பது இவர்களின் வாக்கு மூலத்தில் இருந்தே தெளிவாகிறது.

பேட்டியில் இருந்து

அதேபோல நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்பவரை கொல்ல சில இளைஞர்கள் போகிறார்கள். அவரை கொல்ல இளைஞர் கள் முயற்சித்தபோது அவரது மனைவி கொல்லப்பட்டு விடுகிறார். அந்த இளைஞர்களை அனுப்பியது பி.ஜே.தான். ஆனால் அப்பாவி இளைஞர்கள் சிலரை இந்த சம்பவத்தில் மாட்டிவிட்டுவிடு கிறார். 14வருடங்களாக இன்னமும் சிறையில் இருக்காங்க அந்த அப்பாவி இளைஞர்கள். இப்படி நிறைய சொல்ல முடியும்

எனது பதில்

ஆலிம் ஜார்ஜ் விஷயத்தில் கொல்ல முயன்ற இளைஞர்கள் அப்படி சொன்னார்களா?வாக்கு மூலம் கொடுத்தார்களா? நீதி மன்றத்தில் சொன்னார்களா? அப்படி சொல்லி இருந்தால் இதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகமாவது இருக்கும். நாங்கள் மூவரும் தான் ஆலிம் ஜார்ஜை கொல்ல முயன்றோம் பீஜே தூண்டி விட்டார் என்று கூறப் போகிறார்களா? இந்த வாக்கு மூலத்தில் சொல்லப்பட்ட  குற்றச்சாட்டு இம்மூன்றும் தான்.

இது தவிர பொதுவாக சில குற்றச் சாட்டுக்களையும் கூறியுள்ளனர்.

பேட்டியில் இருந்து

அதுவும் முஸ்லிம்களிடம் தனது செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சை கையிலெடுப்பது இவரது வாடிக்கை.

எனது பதில்

செல்வாக்கு சரியும் போதெல்லாம் பீஜே இப்படிச் செய்வார் என்ற இந்த அபத்தமே இவர்களைத் தோலுரித்துக் காட்ட போதுமானாது.

செல்வாக்கு குறித்து நான் எப்போதும் பேசுவதில்லை. அதையே ஒரு ஆதாரமாகக் காட்டும் போது அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும்.

ஜுலை 4 மாநாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாடு என்றாலும் அதைத் தோல்வியுறச் செய்வதற்காக பீஜே என்ற தனிமனிதனை மையப்படுத்தியே பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். அந்த மாநாடு தோல்வியில் முடிந்திருந்தால் செல்வாக்கு சரிந்து விட்டது எனலாம்.

இவர்கள் சிறைக்குப் போகும் போது இருந்ததை விட இலட்சம் மடங்கு வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இலட்சக்கணக்கானோர் கூடிய மாநாடு சாட்சி

நாட்டின் பிரதமரையே தாமதமின்றி சந்திக்க முடிவது மற்றொரு சான்று.

செல்வாக்கு சரிந்து விட்டது என்பதே பச்சைப் பொய் என்பது இதில் இருந்து தெரிகிறது.

மேலும் நான் செல்வாக்குக்கு என்றும் ஆசைப்பட்டதில்லை. ஜாக் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த நேரத்தில் தான் நான் அதன் பொறுப்பை விட்டு விலகினேன். தமுமுக அபார வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் அதன் முதல் நிலை பொறுப்பாகிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்து நானாக விலகினேன். தொண்டனாக தொடர்ந்தேன். அதன் பின் தவ்ஹீத் ஜமாஅத் மபெரும் மக்கள் இயக்கமாக உள்ள இந்த நேரத்தில் நான் அதன் தலைவர் பத்வி மேலாண்மைக்குழு தலைவர் பதவி ஆகியவற்றை விட்டு விலகி அதில் உறுப்பினாரக் இருக்கிறேன். ஜெயிலில் இருந்து வந்தவுடன் அமைப்பாளர் பதவிக்கு பேரம் பேசி செல்வாக்கு பெற துடிப்பவர்கள் இதைச் சொல்வது தான் கேலிக்கூத்து.
செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சைக் கையில் எடுப்பார் என்று கூறும் இவர்கள் எனது வன்முறை பேச்சுக்கு ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்ட முடியாது.

ஒன்று மட்டும் உண்மை

இவர்கள் கூறுவதில் ஒரு விஷயம் மட்டுமே உண்மை.

1992 டிசம்பர் ஆறில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் எனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. சட்டமும் அரசும் முஸ்லிம்களுக்கு நீதி வழங்காது; நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்தேன். ஆக்ரோஷமாக பேசியுள்ளேன். அல் ஜன்னத்தில் கடுமையான தலையங்கங்களை எழுதியுள்ளேன்.

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தான் இருந்தனர். அவ்வாறு தான் இருந்தேன். அதன் காரணமாக சட்டமும் அரசும் நமக்கு எதிராகவே உள்ளன. நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சமுதாயமும் அன்றைக்கு எண்ணியது. அதையே நானும் பிரதிபலித்துள்ளேன். அந்தப் பேச்சுக்களும் அரசுக்கு எதிராகத் தான் இருந்ததே தவிர பிறசமய மக்களுக்கு எதிராக இருக்கவில்லை. புரிந்து கொள்ளாத சிலர்  அந்த நேரத்தில் சிலர் வேறு பாதைக்குச் சென்றிருக்கலாம் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.

உணர்ச்சி வேகத்தில் அந்தக் கருத்தில் இருந்த நான் ஜனநாயக ரீதியில் நாம் போராடாமல் அரசியல் கட்சிகளின் பின்னே சென்றது தான் இந்த நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தேன்.

ஜனநாயக ரீதியில் போராடும் சமூக அமைப்பு அன்று உ.பியில் இருந்திருந்தால் 1949ல் ராமர் சிலை பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட போதே அவை அகற்றப்பட்டிருக்கும். காங்கிரசை நம்பியதால் தான் மோசம் போனார்கள் என்பதை உணர்ந்து அத்தகைய அமைப்பைக் கட்டி அமைப்பதில் கவனம் செலுத்தினேன். என் கருத்தில் இன்னும் சிலரும் உடன்பட்டனர். அதன் விளைவு தான் தமுமுக.

மேலும் வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக நான் ஆய்வுகள் செய்த போது தெளிவாகத் தெரிந்தது.

முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு வன்முறை தடையாக நிற்கிறது என்பது எனக்குத் தெரிந்த பின் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 

நான் தீவிரமான எண்ணப் போக்கில் இருந்த போது தான் சிறைவாசிகளுக்ககாக எந்த விளைவு ஏற்பட்டாலும் கவலையில்லை என்று துணிந்து இறங்கினேன். அந்தக் கருத்தில் நான் இருந்த போது அது சரியானது என்று பட்டதால் நான் அதில் மிக உறுதியாக இருந்தேன். இரட்டை நிலை மேற்கொண்டதில்லை. அது தவறான கருத்து என்று தெரிந்த போது அதில் உறுதியாக இருக்கிறேன். இப்போதும் என்னிடம் இரட்டை நிலை இல்லை. ஒரு காலகட்டத்தில் நான் இரட்டை நிலை எடுத்ததில்லை.

ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் போராடுவதால் மட்டுமே சமுதாயம் மானத்தோடும் மரியாதையோடும் வாழ முடியும் என்ற கருத்தை திவிரமாகப் நான் பிரச்சாரம் செய்து வருவதன் காரணமாகவும் ஜிஹாத் என்பதற்கு தவறான விளக்கம் கூறுவோருக்கு எதிராக தக்க மறுப்புக்கள் அளித்து வருவதன் மூலமாகவும் தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

வன்முறைக்கும் ஜிஹாதிற்கும் உள்ள வேறுபாட்டைத் தக்க ஆதாரத்துடன் நான் விளக்குவதால் எற்பட்ட கோபம் காரணமாக இது போன்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

அடுத்து பொது மேடையில் விவாதிக்க அழைப்பு விட்டுள்ளனர். இது குறித்து இந்தப் பேட்டி வெளியாவதற்கு முன்பே விவாத அழைப்பை ஏற்றுள்ளேன். பார்க்க

முறைப்படி குற்றச் சாட்டுக்களை பட்டியல் போடட்டும். அவர்களைப் பற்றி அம்பலப்படுத்தும் பட்டியலை நான் போடுகிறேன். முறையாக ஒப்பந்தம் செய்து விவாதிக்க நான் தயார்

-Thanks:http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/nakeeran_kobal/#.V2ylq9J97IU14743_1

One thought on “பயங்கரவாதி நக்கீரன் கோபால்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் சகோ-பி.ஜெ

  1. Pingback: பயங்கரவாதி நக்கீரன் கோபால்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் சகோ-பி.ஜெ | THADAISEY

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s